தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்ததாக சென்னையில் ஷூட்டிங் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக 14 வருடங்களுக்கு பிறகு திரிஷா நடிக்கிறார். லோகேஷ் – விஜய் கூட்டணியில் உருவாகிவரும் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.

அவ்வப்போது ‘லியோ’ படம் பற்றி ஏதேனும் ஒரு அப்டேட் எப்படியாவது வெளியாகி கொண்டு இருக்கிறது. அந்த வகையில், ‘லியோ’ படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், ஒரு கேரக்டரின் பெயர் லியோ என்றும், மற்றொரு கேரக்டரின் பெயர் பார்த்திபன் என்பதும் தெரியவந்துள்ளது. கடைசியாக விஜய் ‘பிகில்’ படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். மேலும், நடிகர் அர்ஜூன் படத்தில், அர்ஜூன் தத்துக்கு சகோதரராக நடித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.