தமிழக அரசியலில் ‘நச்’சென்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தற்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜய் இடையேயான பரஸ்பர வாழ்த்துப் பரிமாற்றங்கள் எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வருகின்றன.
முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றதை அரசியல் நாகரிகத்தின் வெளிப்பாடாகக் குறிப்பிட்டு மு.க.ஸ்டாலின் பதிவிட, அதற்கு “தங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றிகள்” என விஜய் நெகிழ்ச்சியுடன் பதிலளித்துள்ளார். இருவேறு துருவங்களாக இருந்தாலும், நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்ட இந்தச் சம்பவம், தமிழக அரசியலில் ஒரு ஆரோக்கியமான மாற்றத்தைக் காட்டியுள்ளதாக நெட்டிசன்கள் சிலாகித்து வருகின்றனர்.
