முதலில் விஜய்யின் கட்சியின் பெயருக்கு டாப் லிஸ்ட்டாக தமிழக முன்னேற்றக் கழகம், விஜய் மக்கள் கழகம், தமிழக வெற்றி கழகம் என தேர்வு செய்யப்பட்டிருந்ததாம். இந்நிலையில் விஜய் என்றாலும் வெற்றி என்று தான் பொருள்வரும். அந்த வகையில், விஜய் என்ற பெயர் கட்சி பெயரில் இருப்பதற்கு பதிலாக வெற்றி என இருக்கட்டும் என முடிவு செய்தததாக கூறப்படுகிறது.

நடிகர் விஜய் வெற்றி என்ற திரைப்படத்தின் மூலம் தான் 1984ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக, தனது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரால் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.