தமிழகத்தில் தற்பொழுது எழுந்துள்ள அரசியல் சூழலில், திராவிட கட்சிகளின் ஆட்சியைத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டது என்ற விமர்சனங்கள் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த விவாதங்களுக்குத் தனது பாணியில் அதிரடியாகப் பதிலடி கொடுத்துள்ள உலகநாயகன் கமல்ஹாசன், “தமிழகத்தில் இருந்து தமிழ் பேசும் ஒருவர் கட்சி தொடங்கினால், அதுவும் திராவிட கட்சி தான்” என்று ஓப்பனாகப் பேசி புதிய அரசியல் இலக்கணத்தை உருவாக்கியுள்ளார்.

​தவெக-வின் ஒட்டுமொத்த திராவிட எதிர்ப்பு அரசியலையும், சித்தாந்தப் போரையும் இந்த ஒரே ஒரு கருத்தின் மூலம் கமல் தவிடுபொடியாக்கியுள்ளார். மண்ணின் மைந்தர்கள் தமிழ்நாட்டில் கட்சி தொடங்கினாலே அது திராவிடத்தின் வரம்புக்குள்தான் வரும் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள இவருடைய இந்த அதிரடிப் பேட்டி, தவெக தரப்பினரை யோசிக்க வைத்திருப்பதோடு, ஒட்டுமொத்த சமூக வலைத்தளங்களிலும் தற்பொழுது காட்டுத்தீயாய் பரவி பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.