தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வரும் நிலையில் இதனை தொடர்ந்து தளபதி 68 படத்தின் வேலைக்காக விஜய் அமெரிக்கா சென்று உள்ளார். அங்கு டென்ஜால் வாஷிங்டன் நடித்துள்ள ‘ஈக்வலைஸர் 3’ திரைப்படத்தினை பார்த்துள்ளார். அப்போது விஜய் கைகளை நீட்டி கொண்டாடி ஃபேன் பாயாக மாறியுள்ளார். இந்தப் புகைப்படத்தினை இயக்குநர் வெங்கட் பிரபு பகிர்ந்த நிலையில் இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனை தொடர்ந்து யார் இந்த டென்ஜெல் வாஷிங்டன் என்று விஜய் ரசிகர்கள் கூகுளில் தேடி வருகின்றனர்.