தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 திரைப்படத்தில் விஜய் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் தளபதி 68 படம் குறித்த புதிய அப்டேட் ஒன்றை இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.

விஜய் நடிக்கும் 68 வது படத்தை வெங்கட் பிரபு இயக்கம் நிலையில் முதல் கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் பேசிய யுவன் சங்கர் ராஜா, இந்த படத்தில் முதல் பாடல் ஒரு தர லோக்கல் குத்து பாடலாக இருக்கும் என கூறியுள்ளார். இந்த படத்திற்கு யுவன் இசை அமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.