விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக கசிந்த விவகாரம், தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
இது குறித்து புதிய தலைமுறை செய்தி நிறுவனத்திற்கு ஆதவ் அர்ஜுனா அளித்துள்ள அதிரடி பேட்டியில், இப்படம் லீக் செய்யப்பட்டது வெறும் தொழில்நுட்பக் கோளாறு அல்ல, இது விஜய்க்கு விடுக்கப்பட்ட நேரடி அரசியல் மிரட்டல் என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்தப் படத்தை முடக்குவதற்குப் பின்னால் எல். முருகன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் கூட்டுச் சதி இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், எல். முருகன் வீட்டுப் பொங்கல் விழாவிற்குப் ‘பராசக்தி’ படக்குழுவை அனுப்பி வைத்ததே உதயநிதிதான் எனப் பகீர் தகவலைப் பகிர்ந்துள்ளார்.
“எல்.முருகனும், உதயநிதியும் சேர்ந்துகொண்டுதான் ஜனநாயகன் படத்தை ரிலீஸ் பண்ண விடவில்லை”- தவெகவின் ஆதவ் அர்ஜுனா#AadhavArjuna | #Vijay | #Jananayagan | #UdhayanidhiStalin | #LMurugan pic.twitter.com/gX1G5izWHD
— PttvOnlinenews (@PttvNewsX) April 10, 2026
“>
பாஜக கொடுத்த கடும் அழுத்தங்கள் ஒருபுறம் இருந்தாலும், விஜய்க்குப் மிகப்பெரிய பொருளாதார மற்றும் அரசியல் இழப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் திமுக மற்றும் பாஜகவினர் இணைந்து இந்தப் படத்தை வெளியிட்டிருப்பதாகவும், அன்று எம்.ஜி.ஆருக்கு திமுகவினர் கொடுத்த அதே போன்ற நெருக்கடிகளைத் தற்போது விஜய்க்கும் கொடுக்கத் தொடங்கியுள்ளதாகவும் அவர் தனது பேட்டியில் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
