தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து பரம்பொருள் பவுண்டேஷன் தலைவர் மகாவிஷ்ணு விமர்சன ரீதியிலான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் மேற்கொண்ட தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். தேசத்தையே உலுக்கிய இந்தத் துயரச் சம்பவம் குறித்து தற்போது சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பரம்பொருள் பவுண்டேஷன் தலைவர் மகாவிஷ்ணுவிடம் விஜய்யின் அரசியல் வருகை குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு:

“அரசியல் என்பது விளையாட்டு அல்ல. விஜய்யைச் சுற்றி இருப்பவர்களாலேயே அவருக்குப் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ரசிகர்களின் உயிரைப் பணயம் வைத்து விஜய் அரசியல் செய்கிறார். தற்போதைய சூழலில் அவருக்கு இன்னும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. அரசியலில் தனது ரசிகர்களைப் பக்குவப்படுத்த வேண்டிய மிகப்பெரிய கடமை விஜய்க்கு இருக்கிறது.”

இவ்வாறு அவர் தெரிவித்தார். கரூரில் நிகழ்ந்த அசம்பாவிதத்தைச் சுட்டிக்காட்டி மகாவிஷ்ணு பேசியிருப்பது த.வெ.க. தொண்டர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.