தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் மீனாட்சி சவுத்திரி. இவர் தமிழ் சினிமாவில் விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளிவந்த கொலை திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நிலையில் சிங்கப்பூர் சலூன் மற்றும் நடிகர் விஜயின் நடிப்பில் வெளிவந்த தி கோட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாள சினிமாவிலும் நடித்துவரும் மீனாட்சி சௌத்ரி தற்போது ஒரு பேட்டியில் தி கோட் படத்தில் நடித்தது தவறு என்று கூறியுள்ளார்.

இது பற்றிய அவர் கூறும்போது நான் கோட் படத்தில் நடித்ததற்காக பலர் என்னை சமூக வலைதளங்களில் கேலியும் கிண்டலும் செய்தார்கள். விஜயுடன் தான் நடித்த ஸ்ரீநிதி கதாபாத்திரத்தால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். இந்த படத்தினால் வந்த ட்ரோலால் வேதனையிலிருந்து இருந்தேன். ஆனால் லக்கி பாஸ்கர் படத்தில் நடித்ததற்காக பலரும் என்னை பின்னர் பாராட்டினார்கள். மேலும் அப்போதுதான் நல்ல கதை அம்சம் கொண்ட படங்களை மட்டும் தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்று முடிவு செய்ததாக கூறினார்.