தமிழ் சினிமாவில் சின்னத்திரையிலிருந்து வெள்ளி திரைக்கு வந்து தன்னுடைய கடுமையான உழைப்பின் மூலம் முன்னணி நடிகராக உயர்ந்தவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் அமரன் திரைப்படம் வெளியாகி 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு ஆங்கில youtube சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அப்போது பல விஷயங்கள் குறித்து பகிர்ந்தார். அவர் பேசியதாவது, சினிமா துறையில் என்னை போன்ற சாமானிய மனிதர்கள் வருவதை சிலர் மட்டுமே வரவேற்கும் நிலையில் அதனை பலர் விரும்பவில்லை. இந்தத் துறைக்கு வருவதற்கு அவர் யார் என்று பலர் கேட்ட நிலையில் சிலர் என் முகத்துக்கு நேராகவே இன்னும் எந்த துறையில் என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கூறினர்.

நான் அவர்களுக்கு எந்த பதிலும் சொல்லாமல் சிரித்துக்கொண்டே கடந்து விடுகிறேன். நான் என்னுடைய வெற்றியின் மூலம் அவர்களுக்கு பதிலடி கொடுக்க விரும்பவில்லை. இந்த வெற்றி அவர்களுக்கானது கிடையாது. இந்த வெற்றி என்பது என்னுடன் சேர்ந்து 100 சதவீத உழைப்பை போடும் என்னுடைய படக்குழுவுக்கும் என்னுடைய ரசிகர்களுக்கும் சொந்தம் . உங்களைப் போன்று நாங்களும் வரவேண்டும் என்று சொல்லும் மக்களுக்கானது. அவர்களை கடந்து செல்வது மட்டும்தான் அவர்களை கையாள்வதற்கான ஒரே ஒரு வழி. மேலும் என்னுடைய படம் தோல்வியடையும்போது சமூக வலைதளங்களில் அதற்கு நான் மட்டும்தான் காரணம் என்று சில விமர்சிக்கும்  நிலையில் அதுவே என்னுடைய படம் வெற்றி அடைந்தால் என்னை தவிர மற்ற எல்லோரையும் புகழ்கிறார்கள் என்று வேதனையுடன் கூறினார்.