மதுரையில் நடிகர் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜயின் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.. மத்தியில் மோடியின் நல்லாட்சி மாநிலத்தில் விஜயின் மக்களாட்சி, தொலைபேசியில் பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்து, தமிழகத்திற்கு நல்ல காலம் பிறந்தது. கூட்டணி கட்சிக்கும் தமிழக மக்களுக்கும் விஜய் நன்றி தெரிவித்தார். தமிழக முழுவதும் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி தொண்டர்கள் உற்சாகம் என்ற வாசகங்கள் அதில் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.