பிரபல நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நேற்று காலை உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு திரையுலகத்தினர் அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் கர்ப்பிணிகளுக்கு இளைஞர்கள் சிலர் ரத்ததானம் கொடுத்து விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.