விஜயகாந்த்தின் மிகப்பெரிய ரசிகன் நான் என நடிகர் விஷால் தெரிவித்தார். மறைந்த கேப்டன் விஜயகாந்த் வீட்டிற்கு சென்று விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மற்றும் அவரது மகன்களுக்கு விஷால் ஆறுதல் தெரிவித்தார். பின்னர் பேசிய அவர், தான் மட்டுமின்றி அனைத்து கலைஞர்களும் சரிசமம் என நினைத்தவர்; நடிகராக, அரசியல்வாதியாக சமூக வாதியாக விஜயகாந்த்தின் பெரிய ரசிகன் நான்.

நடிகர் சங்கம் சார்பில் 19ஆம் தேதி இரங்கல் கூட்டம் நடத்துகிறோம். நடிகர் சங்க பொதுச் செயலாளராக வெற்றி பெற்று விஜயகாந்த் அண்ணா வீட்டிற்கு வந்தபோது அவர் சொன்ன வார்த்தைகள் இன்னும் காதில் கேட்டுக் கொண்டிருக்கிறது என உருக்கமுடன் பேசினார்.