தமிழக அரசியல் களத்தில் இன்று மாலை 4 மணிக்கு விசிக தனது முக்கிய முடிவை அறிவிக்கவுள்ள நிலையில், சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமையகமான ‘அம்பேத்கர் திடல்’ பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை விசிக அலுவலகத்திற்குப் புதிய சொகுசு சோஃபாக்கள் கொண்டு வரப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க ஆதரவு கோர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
விஜய்க்காக VCK அலுவலகத்தில் வந்திறங்கிய புதிய சோஃபாக்கள்#TVKVijay #Thirumavalavan #vckoffice #TNElectionResults2026 #ETVBharatTamilnadu pic.twitter.com/7rclnkdoWd
— ETV Bharat Tamil nadu (@ETVBharatTN) May 9, 2026
விஜய்யின் இந்த வருகையை முன்னிட்டே, அவரை வரவேற்கும் விதமாக அலுவலகத்தில் புதிய இருக்கைகள் மற்றும் சோஃபாக்கள் உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 117 இடங்களில் ஆதரவு பெற்றுள்ள தவெக-வுக்கு விசிக-வின் இந்த 2 இடங்கள் மிகவும் முக்கியம் என்பதால், இந்தச் சந்திப்பு மற்றும் புதிய சோஃபாக்கள் குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன.
