சீனாவும் சிங்கப்பூரும் பல காலங்களாக நெருங்கிய நட்பு நாடுகளாக உள்ளது. சிங்கப்பூரில் அதிக சீனர்கள் வசிக்கிறார்கள். இந்நிலையில் இரண்டு நாடுகளும் விசா நடைமுறையில் மாற்றங்களை ஏற்படுத்த ஒப்பந்தமிட்டுள்ளன. அதன்படி இரு நாடுகளுக்கு இடையே பயணிக்க விசா தேவை இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

சீனா மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த மக்கள் தங்களது பாஸ்போர்ட் மட்டும் பயன்படுத்தி இரண்டு நாடுகளுக்கும் பயணிக்கலாம். அதோடு 30 நாட்கள் வரை அவர்கள் அங்கு தங்கிக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை பிப்ரவரி ஒன்பதாம் தேதியிலிருந்து அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இரண்டு நாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் பலப்படும் என சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.