அமெரிக்காவை சேர்ந்த பெண் எழுத்தாளரான ஜீன் கரோல் என்பவர் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்திருந்தார். இந்த குற்றச்சாட்டை மறுத்த ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கங்களில் ஜீன் கரோலை கடுமையாக விமர்சித்து பதிவுகளை வெளியிட்டார்.

இந்நிலையில் நியூயார்க் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த ஜீன் கரோல் டொனால்ட் டிரம்ப் தனக்கு 10 மில்லியன் டாலரை இழப்பீடாக கொடுக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இன்று இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி டொனால்ட் டிரம்ப் எழுத்தாளர் ஜீன் கரோலுக்கு 83.3 மில்லியன் டாலர் இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

எழுத்தாளர் ஜீன் கேட்டதை விட சுமார் பத்து மடங்கு இது அதிகம் என்று கூறப்படுகிறது. இதனிடையே தீர்ப்பை வாசிப்பதற்கு முன்பே நீதிமன்றத்தில் இருந்து வெளியேறிய டிரம்ப் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு இது அமெரிக்கா இல்லை என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.