
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதியில் அனிதா அகாடமியில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, கண்டிப்பாக ஒருநாள் தமிழக மக்களின் குரலுக்கு செவி சாய்த்து மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்துவிடும். அதன் பிறகு புதுசு புதுசா கட்சி தொடங்கினவங்க எல்லாம் திமுக அழிய வேண்டும் என்று சொல்கிறார்கள்.
அவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. திமுக அரசு 4 வருஷமா செஞ்ச சாதனைகளை பார்க்க வேண்டும். வாழ்க வசவாளர்கள். தேவையில்லாமல் எல்லோருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசிம் இல்லை. தேவையுமில்லை. எங்கள் நேரத்தை தேவையில்லாமல் நாங்கள் வீணடிக்க விரும்பவில்லை. ஒரு கணம் திமுக அரசு செய்த சாதனைகளை பார்க்கட்டும் என்று கூறினார்.
மேலும் நடிகர் விஜய் கட்சி தொடங்கியதில் இருந்து திமுகவை நேரடியாகவே விமர்சித்து வருகிறார். அதாவது குடும்ப அரசியல் செய்து வரும் திமுக கட்சி அரசியல் எதிரி என்று அறிவித்த நிலையில் திராவிட மாடல் என்று சொல்லி அவர்கள் மக்களை ஏமாற்றுவதாகவும் கூறினார். நேற்று நடந்த தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டத்தின் போது தமிழக மக்களுக்கு எதிராக திமுக அரசு ஆட்சி செய்வதாகவும் பொய் வாக்குறுதிகள் மூலம் மக்களை அவர்கள் ஏமாற்றிவிட்டனர் என்றும் கூறினார்.
அதோடு தேர்தலில் ஜெயிப்பதற்காக சொன்ன வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்றும் அதனை மகளிர் உரிமைத்தொகை மற்றும் பரிசுத்தொகை என்று அறிவித்துவிட்டு ஒருபுறம் மது கடைகள் மூலமாக வருவாய் பெருக்கி வருவதாகவும் குற்றச்சாட்டியிருந்தார். மேலும் திமுக அரசை கடுமையாக சாடி வரும் விஜய்க்கு தற்போது பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் முதல்வர் ஸ்டாலின் இப்படி பேசியுள்ளார்.