வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து 925 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் ஏப்ரல் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த பேருந்துகளை www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் TNSTC செயலி மூலமாக முன்பதிவு செய்யலாம். இந்த வார இறுதியில் பயணம் மேற்கொள்ள இதுவரை 11 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.