பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ள நிலையில், ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருக்கு பயங்கரவாத அமைப்பு கொலை மிரட்டல் விடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள ‘ஜமாத்-உல்-அரார்’ என்ற ஆயுதமேந்திய குழு, இந்த வீரர்கள் உடனடியாக தொடரிலிருந்து விலக வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் ஒருவேளை அவர்கள் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டால், அவர்களின் பாதுகாப்பிற்கு எவ்வித உத்தரவாதமும் அளிக்க முடியாது என்று அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டல் காரணமாக பிஎஸ்எல் தொடரில் பங்கேற்கவிருக்கும் வெளிநாட்டு வீரர்களிடையே பெரும் அச்சம் நிலவுகிறது.

இதனால் வார்னர், ஸ்மித் தவிர ஆடம் ஜம்பா, மொயீன் அலி மற்றும் டேவன் கான்வே போன்ற முக்கிய வீரர்களும் இந்த தொடரில் விளையாட உள்ளனர். ஏற்கனவே மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளரர்.