பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த மாதம் 11-ஆம் தேதி வெளியான நிலையில் தில் ராஜூ படத்தை தயாரித்திருந்தார். இந்த படத்தில் ராஸ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு மற்றும் ஷாம் போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். அதன் பிறகு நடிகர் விஜய்க்கு அம்மாவாக முதன்முறையாக பிரபல நடிகை ஜெயசுதா நடித்திருந்தார்.

வாரிசு படத்தில் விஜய் மற்றும் ஜெயசுதாவின் சென்டிமென்ட் காட்சிகள் ஹைலைட் என்று கூறப்பட்டது. இந்நிலையில் வாரிசு படத்தில் நடிப்பதற்காக நடிகை ஜெயசுதா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி நடிகை ஜெயசுதாஸ் 30 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளாராம். மேலும் வாரிசு திரைப்படம் 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்து வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.