உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் அதில் ஏற்படும் பலவிதமான மோசடிகளில் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதலில் வேலை வாங்கிய தருவதாக கூறி வாட்சப்பில் சிலர் மெசேஜ் செய்வார்கள். அதனைப் பார்த்து யாரையும் நம்பி ஏமாற வேண்டாம். இது பொதுவாக மக்களை ஏமாற்றி பணத்தைப் பறிக்கும் சைபர் கிரிமினல்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு மோசடியாகும். முதலில் வேலைக்கு சிறிய தொகையை அளிக்க வேண்டும் என்று கூறி பணத்தை வாங்கிய பிறகு உங்களை ஏமாற்றி விடுவார்கள். எனவே இது போன்ற செய்தியை நம்பி ஏமாற வேண்டாம்.

அதனைப் போலவே ஐந்து நபர்களுடன் அவர்களின் ஈமெயில் ஐடிகளுடன் மெசேஜை ஷேர் செய்தால் உங்களுக்கு ஐபோன் பரிசு வழங்கப்படும் என்று ஒரு செய்தி வரும். இப்படி பரிசு வழங்கப்படுவதாக கூறி வரும் செய்திகளை நம்பி தனிப்பட்ட விவரங்களை யாரும் பகிர வேண்டாம் எனவும் எந்த ஒரு லிங்குகளையும் நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்ததாக பேங்க் ஆப்ஸ்களின் APK பைல்ஸ்களை மோசடி நபர்கள் தங்களால் தயார் செய்யப்பட்ட malicious code மூலமாக மாற்றியமைத்த லிங்குகளை வாட்ஸ் அப் மெசேஜ் மூலம் அனுப்பி பேங்க் ஏஜெண்டுகளாக மாறி நம்ப வைத்து விடுவார்கள். இது போன்ற செய்திகளை நம்ப வேண்டாம்.

வாட்ஸ் அப்பில் சர்வதேச நபர்களில் இருந்து போன் கால்கள் வருகின்றன. உங்களுக்கும் இது போன்ற கால்கள் வந்தால் அதனை எடுக்க வேண்டாம் எனவும் இத்தகைய நம்பரை ரிப்போர்ட் செய்து பிளாக் செய்து விடுங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஹேக்கர்கள் மற்றும் சைபர் கிரிமினல்கள் whatsapp மூலம் லிங்குகளை அனுப்பி மோசடியில் ஈடுபடுகிறார்கள். இந்த லிங்கை கிளிக் செய்தால் ஒரு இணையதள பக்கத்திற்கு அழைத்துச் செல்லும் இதில் நம்முடைய தகவல்கள் மற்றும் சேமிப்புகள் மோசடி நபர்களின் கையில் சிக்கி விடும். எனவே வாட்ஸ் அப்பில் வரும் லிங்கை கிளிக் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வாட்சப் மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு two factor authentication போன்ற பாதுகாப்பு அம்சங்களை எனேபில் செய்ய வேண்டும் எனவும் உங்களுக்கு தெரியாத நபர்களுக்கு உங்களது தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.