இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி ரிசர்வ் வங்கி 0.25 சதவீதம் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது. இதனால் வட்டி விகிதம் 6.25 சதவீதத்திலிருந்து 6.50 சதவீதமாக மாறியது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய போதும், பொதுத்துறை வங்கியான கனரா வங்கி தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.

அதன்படி கடன் வட்டி விகிதத்தை 15 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்துள்ளது. இதுவரை 9.40% ஆக இருந்த ஆர்எல்எல்ஆர் கடன்களுக்கான வட்டி 9.25 % ஆக குறையும். மேலும் இந்த அறிவிப்பு கனரா வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.