இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஐரோப்பிய முறைப்படி கன்னத்தில் முத்தமிட்டு வரவேற்ற வீடியோ, சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அரசியலில் தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரான் தலைவர்களுக்கு இணையாகப் பேசப்படுபவர் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான். உக்ரைன் போர் முதல் உள்நாட்டு அரசியல் வரை பல்வேறு சவால்களைச் சந்தித்து வரும் மேக்ரான், தற்போது ஒரு ‘வைரல்’ வீடியோ மூலம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளார்.
அதாவது ஹார்முஸ் நீரிணை விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காக இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை மேக்ரான் சந்தித்தார். அப்போது மேக்ரான் குனிந்து மெலோனியின் கன்னத்தில் முத்தமிட்டு ஐரோப்பிய கலாச்சாரப்படி தனது வரவேற்பைத் தெரிவித்தார். வெறும் 18 வினாடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோவில், மேக்ரானின் இந்தச் செயலால் மெலோனி சற்று அசௌகரியமாகவும், திகைப்பாகவும் காணப்பட்டதாக நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
French President Emmanuel Macron and Italian Prime Minister Giorgia Meloni shared a rather awkward and unusual hug right in front of the cameras.
The video quickly went viral online. pic.twitter.com/NQHnhRmDEt
— NEXTA (@nexta_tv) April 17, 2026
ஏற்கனவே டொனால்ட் ட்ரம்ப், மேக்ரானின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவரது மனைவி பிரிகிட்டே மேக்ரான் ஆகியோரைக் குறித்துப் பலமுறை வெளிப்படையாகக் கிண்டல் செய்துள்ளார். குறிப்பாக, மேக்ரான் தம்பதியினருக்கு இடையிலான வயது வித்தியாசம் குறித்து மேற்கத்திய ஊடகங்களில் அடிக்கடி விவாதங்கள் எழும். இத்தகைய சூழலில், மெலோனியுடனான இந்த வீடியோ மேக்ரானுக்கு மேலும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சமூக வலைதளப் பயனாளர்கள் இந்த வீடியோவை வைத்துப் பல்வேறு மீம்களைப் பகிர்ந்து வருகின்றனர். மனைவி குறித்த பேச்சை மேக்ரான் மறந்துவிட்டார் போல எனச் சிலர் கிண்டலடிக்கின்றனர். இது ஒரு புதிய வகை ராஜதந்திரமா? எனச் சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும் அரசியல் ஆய்வாளர்கள் இது ஒரு சாதாரண ஐரோப்பிய வரவேற்பு முறைதான் என்று கூறினாலும், மேக்ரான் ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கியிருப்பதால் இந்த வீடியோ காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
