தமிழக அரசியலில் இன்று அடுத்தடுத்து அரங்கேறும் அதிரடி திருப்பங்களின் ஒரு பகுதியாக, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவன் விழாக்கோலம் பூண்டுள்ளது.

இன்று காலை ஐயூஎம்எல் தலைவர் காதர் மொகிதீனைச் சந்தித்து ஆதரவு பெற்ற கையோடு, முதலமைச்சர் ஜோசப் விஜய் நேராகச் சத்தியமூர்த்தி பவனுக்கு வருகை தந்தார். நுழைவு வாயில் வரை நேரில் வந்து முதலமைச்சர் விஜயை வரவேற்ற தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, அவருக்குச் சால்வை அணிவித்து மிகுந்த மரியாதையுடன் உள்ளே அழைத்துச் சென்றார்.

தவெக தலைமையிலான புதிய அமைச்சரவை அமைப்பதற்கு ஆதரவு அளித்த அனைத்துக் கட்சித் தலைவர்களையும் விஜய் நேரில் சந்தித்து வரும் நிலையில், காங்கிரஸின் இந்த உற்சாக வரவேற்பு திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

“மக்கள் நலனுக்காகவும், நிலையான ஆட்சிக்காகவும் கைகோர்ப்போம்” என்கிற தொனியில் இந்தச் சந்திப்பு அமைந்திருப்பது, கோட்டை வட்டாரத்தில் தவெக – காங்கிரஸ் இடையேயான புதிய அரசியல் அச்சு உருவாவதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

“>