வருகிற நவம்பர் 5ஆம் தேதி அமெரிக்காவின் அதிபரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். இருவரும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அமெரிக்க மக்களின் விருப்பத்திற்குரிய மெக்டொனால்ட் ஹோட்டலில் முன்னாள் அதிபர் ட்ரம்ப் செப் உடை அணிந்து பிரென்ச் பிரைஸ் பொறிக்கும் பணியில் ஈடுபட்டார்.

அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. கமலா ஹாரிசை விட 15 நிமிடம் அதிகமாக தான் ஹோட்டலில் உழைத்துள்ளேன் டிரம்ப் கூறியுள்ளார். கமலஹாரிஸ் இளமைக் காலத்தில் தான் அந்த ஹோட்டலில் பணியாற்றியது குறித்து பிரச்சாரங்களில் சிலாகித்து வருகிறார். அதனை கிண்டலடிக்கும் விதமாக ட்ரம்ப் இப்படி செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.