வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் ரொக்கமாகப் பணம் செலுத்தும் முறை முழுமையாக நிறுத்தப்பட உள்ளது. இனி FASTag மற்றும் UPI போன்ற டிஜிட்டல் முறைகள் மூலம் மட்டுமே சுங்கக் கட்டணத்தைச் செலுத்த முடியும் என்று அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பயண நேரத்தைச் சேமிக்கவும், நெடுஞ்சாலைத் துறையை நவீனப்படுத்தவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் 98 சதவீத வாகனங்கள் ஏற்கனவே FASTag முறையைப் பயன்படுத்தி வருவதால், எஞ்சியிருக்கும் ரொக்கப் பரிவர்த்தனைகளையும் டிஜிட்டல் முறைக்கு மாற்ற இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நிற்காமல் தடையின்றி செல்ல முடியும். எனவே, வாகன ஓட்டிகள் தங்களின் FASTag கணக்கில் போதிய இருப்பு இருப்பதை உறுதி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
