சென்னையில் மெட்ரோ பணிகளுக்கு அடுத்தபடியாக திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டம் அமல்படுத்த இருப்பதாக மெட்ரோ இயக்க சாத்தியக்கூறு அறிக்கை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் தாக்கல் செய்து இருந்தது. இதனை தொடர்ந்து திருச்சியில் தற்போது விமான நிலைய விரிவாக்க பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. சாலைகள் மற்றும் பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் திருச்சியில் 45 கிலோமீட்டர் தூரத்திற்கு டபுள் டக்கர் பாலம் அமைக்கப்பட இருப்பதாகவும் அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

இதில் முதல்கட்டமாக சமயபுரத்தில் இருந்து வயலூர் வரையில் 19 கிலோமீட்டர் தூரத்திற்கு டபுள் டக்கர் பாலம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மெட்ரோபணிகள் மற்றும் மேம்பாலம் சாலைக்காக இந்த டபுள் டக்கர் பாலம் அமைக்கப்பட இருப்பதாகவும் விரைவில் இந்த பாலம் குறித்து அறிவிப்புகள் வெளியிடப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.