கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் வட மாநில தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதியில் சில தெருநாய்கள் கூட்டமாக நின்று மண்ணை தோண்டியது. இதனை பார்த்த மக்கள் அருகே சென்று உற்று கவனித்த போது ஒரு பச்சிளம் குழந்தையின் உடல் மண்ணுக்குள் புதைந்து இருப்பதை அறிந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மண்ணில் புதைக்கப்பட்ட பெண் சிசுவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது மஜ்ரு ஷேக்(33) என்பவர் அவரது மனைவி ஷீலாவுடன்(32) கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கூலி வேலைக்கு வந்தார்.
கடந்த 24-ஆம் தேதி வீட்டிலேயே ஷீலாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தையை வளர்க்க விருப்பமில்லாமல் பிறந்த சில மணி நேரத்திலேயே அவர்கள் குழந்தையை கொன்று வீட்டிற்கு முன்பு இருக்கும் தோட்டத்தில் குழி தோண்டி உடலை புதைத்தது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
