நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்துகின்றனர். தற்போது விற்பனைக்காக பல்வேறு வடிவங்கள், வண்ணங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டத்தை சேர்ந்த மகேஷ் என்ற கலைஞர் அமெரிக்கா வைரத்தில் விநாயகர் சிலையை உருவாக்கியுள்ளார். இதன் மதிப்பு 6 லட்சம் ரூபாய் ஆகும். அதன் எடை 50 கிலோ. இந்த விநாயகர் சிலை பெங்களூரு தெற்கு ராமநகரில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் நிறுவப்படுகிறது. இந்த சிலையை யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்ல உள்ளனர்.
