மெட்ரோ ரயிலில் எடுக்கப்பட்ட 53 வினாடி வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பலரது இதயங்களைத் தொட்டு வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், துபாயில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் பணிபுரியும் நபர் ஒருவர், தனது வாழ்க்கையில் சந்தித்த மிகப்பெரிய இழப்பை மிகவும் நிதானமாகப் பகிர்ந்து கொள்கிறார்.

இந்தியாவில் ஒரு காலத்தில் ரூ. 2 கோடி மதிப்பிலான கட்டுமானப் பொருட்கள் வணிகம் செய்து வந்த இவர், கொரோனா பெருந்தொற்றால் அந்தத் தொழிலில் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து, தனது மொத்த சேமிப்பையும் இழந்துள்ளார்.

“இப்போது என்னிடம் எதுவுமே இல்லை” என்று அவர் அமைதியாகக் கூறும் விதம் பார்ப்பவர்களைக் கண் கலங்க வைக்கிறது. இவ்வளவு பெரிய பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்த பிறகும், அவர் காட்டும் மன உறுதியும் “வாழ்க்கை அதன் போக்கில் நகர்கிறது” என்று அவர் சொல்லும் தத்துவமும் இணையவாசிகளை வியக்க வைத்துள்ளது.

இந்த வீடியோ 77,000-க்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள நிலையில், பலரும் அவரது கண்ணியத்தையும் தைரியத்தையும் பாராட்டி வருகின்றனர். “அவரது கண்களில் வலியை உணர முடிகிறது, அவருக்குப் பெரிய மரியாதை” என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“>

 

வீழ்ச்சியில் இருந்து மீண்டு வரத் துடிக்கும் அந்த மனிதரின் புன்னகை, வாழ்வில் கஷ்டப்படுபவர்களுக்கு ஒரு பெரிய ஊக்கமாக அமைந்துள்ளது.