
குற்றம் செய்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படுவது வாடிக்கையான நடைமுறைதான். இருப்பினும் இந்த தண்டனைகளில் சில கடுமையான, சாதாரணமான வகைகள் உள்ளது .அது குற்றத்திற்கு தகுந்தபடியும், வயதைக் காரணம் காட்டியும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் அமெரிக்காவில் முதல் முறையாக தண்டனை ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இரக்கம் கொண்ட மரண தண்டனை என்ற பெயரில் குற்றவாளி ஒருவருக்கு நைட்ரஜன் வாயு செலுத்தப்பட்டு அதன் மூலமாக உயிர் பறிக்கப்பட்டுள்ளது. கணவர் ஒருவர் தன்னுடைய மனைவி பெயரில் அதிக தொகை அளவில் காப்பீடு ஒன்றை எடுத்து இருந்தார். இதற்காக அவரை கொலை செய்துள்ளார்.
இந்த வழக்கில் கணவரின் கூட்டாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு 2019 இல் நிறைவேற்றப்பட்டது. இதனை அடுத்து 2022-ம் வருடம் கணவருக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டது. இதற்காக அவருக்கு ஊசி வழியே தண்டனை நிறைவேற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர் . அதிகாரிகளால் அவருடைய உடலில் மருந்து செலுத்தும் இணைப்பை சரியாக மேற்கொள்ள முடியாத காரணத்தால் அது தோல்வியில் முடிந்தது. இதனால் முதல் மரண தண்டனையிலிருந்து தப்பித்த அவர் இரண்டாவது முறையாக கடந்த வருடம் மே மாதத்தில் மரண தண்டனை நிறைவேற்ற திட்டமிடப்பட்டது.
நைட்ரஜன் வாயுவை செலுத்தி தண்டனை நிறைவேற்ற உத்தரவை அமெரிக்க உச்சநீதிமன்றம் பிறப்பித்தது. அந்த நாட்டில் முதன் முறையாக இந்த வழியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அறை ஒன்றில் அந்த குற்றவாளி கட்டிவைக்கப்பட்டார். அவருக்கு முக கவசம் அணிவிக்கப்பட்டது. அதோடு சுவாசக் குழாய் ஒன்றும் இணைக்கப்பட்டது. சுவாசிக்கும் காற்றுக்கு பதிலாக அதன் வழியே தூய்மையான நைட்ரஜன் செலுத்தப்பட்டது. இதன் மூலம் அவர் சில வினாடிகளில் சுய நினைவு இழந்து அடுத்த சில நிமிடங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக இறந்தார். இது வலியில்லாத மற்றும் இரக்கம் கொண்ட மரண தண்டனை ஆகும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அமெரிக்காவில் மரண தண்டனை ஊசிக்கு பிறகு இப்போது இந்த வகையில் மரண தண்டனை வழங்கப்படுவது முதன்முறை.