மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், விரைவில் கூட்டணி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவேன். யாருடன் கூட்டணி என்பதை விட வெற்றி கூட்டணியாக நம்முடைய அணி இருக்கும். ஸ்டாலின் டெல்லியை பார்த்து பயப்பட ஆரம்பித்துள்ளார். திமுகவை வீழ்த்தி இந்த முறை வரலாறு படைப்போம் என்று டிடிவி தினகரன் சூளுரைத்துள்ளார்.