அரசு ஊழியர்கள் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கிட்டு முறையை தேர்வு செய்வதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்கி கருவூலத்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் துறை பணியாளர்கள் வருமான வரி செலுத்துவதற்கு இரண்டு வகை கணக்கெட்டும் முறை அமலில் உள்ளது. சேமிப்பு மற்றும் முதலீடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வருமான வரி பிடித்தத்தில் கழிவுகள் பெற பழைய கணக்கு முறையில் வழி உள்ளது. சேமிப்பு மற்றும் முதலீட்டை காட்டி வரி பிடித்ததில் கழிவு பெறுவதற்கான வழி இல்லாமல் குறைந்த வரியுடன் புதிய கணக்கெட்டும் முறை இருக்கின்றது.

அதில் எந்த முறையில் தங்களுக்கு வருமான வரி பிடித்தல் செய்யப்பட வேண்டும் என்பதை அரசு ஊழியர்கள் மார்ச் 18 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் தற்போது 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி உரிய அலுவலர்கள் மூலமாக தேவையான விவரங்களை அளிக்க வேண்டும். பான் எண் அப்டேட் செய்யாதவர்கள் கணக்கிட்டு முறையை தேர்வு செய்யாதவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் வருமான வரி பிடித்ததில் கழிவு பெற தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.