இந்தியாவில் 2025 ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்ச ஊதியத்தை வாழ்நாள் ஊதியமாக மாற்றுவதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐநாவின் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கையின்படி தற்போது தேசிய சராசரியாக தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளமாக 176 ரூபாய் உள்ளது. இந்த புதிய திட்டம் அமலுக்கு வந்தால் இது பல மடங்கு அதிகரிக்கும். இந்தியாவில் சுமார் 50 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்களில் 90 சதவீதம் பேர் அமைப்புசாரா துறையில் தற்போது பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.