2022-23 நிதி ஆண்டிற்க்கான வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்ய ஜூலை 31-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. இந்த காலக்கெடுவானது முடிவடைந்தது. இதனால் பலரும் வருமானவரி செலுத்தினார்கள். இந்நிலையில் இந்த ஆண்டு மொத்தம் 6.77 கோடி போ் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளதாக வருமான வரித்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வருமான வரி கட்டுவதற்கான கடைசி தேதி ஜூலை 31 உடன் முடிந்துவிட்டது. அன்றைய தேதிவரை 14% பேர் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என கூறப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்த தவறியவர்கள் அபராத கட்டணம் மற்றும் செலுத்த வேண்டிய தொகையில் ஒருமாதத்திற்கு 1% வட்டியும் சேர்த்து டிசம்பர் 31வரை கட்டலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. NIL ரிட்டர்ன் தாக்கல் செய்பவர்களுக்கு எந்த அபராதமும் கிடையாது.