இன்றைய காலகட்டத்தில் புதுப்புது மோசடிகள் அரங்கேறி வருகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  மக்களுக்கு இதுபோன்ற மோசடிகள் குறித்து அரசு மற்றும் காவல்துறை, வங்கிகள் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு தான் வருகின்றது.  இந்நிலையில் IRCTC பயன்படுத்தும் ரயில் பயணிகள் சைபர் கிரிமினல்களால் குறிவைக்கப்பட்டு, ‘IRCTC Rail Connect’ செயலியை பதிவிறக்க போலி இணைப்பு அனுப்பப்படுவதாக IRCTC தெரிவித்துள்ளது.

பயணிகள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ள IRCTC, அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் கூகுள் ப்ளே ஆப் ஸ்டோர்களில் பதிவிறக்கம் செய்த செயலியை மட்டும் பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது