2022-23 நிதி ஆண்டிற்க்கான வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்ய ஜூலை 31-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. இந்த காலக்கெடுவானது நேற்றோடு முடிவடைந்தது. இதனால் பலரும் வருமானவரி செலுத்தினார்கள். இந்நிலையில் இந்த ஆண்டு மொத்தம் 6.77 கோடி போ் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளதாக வருமான வரித்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 53.67 லட்சம் போ் முதல் முறையாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை விட இது 16.1% அதிகமாகும். இந்நிலையில் வரி செலுத்தியவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தபோது, சிலருக்கு ரீபண்ட் தொகை ரூ.15.490 வரவு வைக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வருகிறது. மத்திய அரசின் PIBFactCheck, இதுபோன்ற செய்திகள் அனுப்பப்பட்டு தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்படுவதை கண்டறிந்தது. வருமான வரித்துறை இதுபோன்ற செய்திகளை அனுப்பவில்லை என்றும், இதுபோன்ற செய்தியை நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்துகிறது.