2022-23 நிதி ஆண்டிற்க்கான வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்ய ஜூலை 31-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. இந்த காலக்கெடுவானது நேற்றோடு முடிவடைந்தது. இதனால் பலரும் வருமானவரி செலுத்தினார்கள். இந்நிலையில் இந்த ஆண்டு மொத்தம் 6.77 கோடி போ் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளதாக வருமான வரித்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 53.67 லட்சம் போ் முதல் முறையாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை விட இது 16.1% அதிகமாகும். மேலும், தாமதமாக வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்பவர்கள் 5000 அபராதமாக செலுத்த வேண்டும் எனவும் வருமான வரித்துறை சார்பில் தகவல் தெரிவித்துள்ளது.