இந்திய ரயில்வே மூலமாக பொது மக்களுக்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இனி முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட் வாங்க ரயில் பயணிகள் மணி கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தங்களுடைய செல்போனை பயன்படுத்தி டிக்கெட்டை வாங்கிக் கொள்ளலாம். UTS செல்போன் செயலி மூலம் அனைத்து ரயில்களுக்கும் முன்பதிவு செய்யப்படாத நடைமேடை மற்றும் சீசன் டிக்கெட்டுகளை ரயில் பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். டிக்கெட் வாங்க நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்க்க விரும்பினால் முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட் செல்போனில் இருந்து முன்பதிவு செய்ய விரும்பினால் இந்த செயலியை பயன்படுத்தலாம்.

யூடிஎஸ் ஆப்பை ஓப்பன் செய்யவும். உங்களுடைய பயனர் ஐடியை பதிவு செய்து உங்கள் விவரங்களை உள்ளிடவும்.UPI, நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் உங்கள் வாலட்டை ரீசார்ஜ் செய்ய வேண்டும். ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, முதலில் காகிதமற்ற அல்லது காகித விருப்பங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். “புறப்படும் நிலையம்” மற்றும் “சேரவேண்டிய நிலையம்” ஆகியவற்றை உள்ளிடவும். பணம் செலுத்த “Get fare” என்ற ஆப்சன் இருக்கும். உங்கள் வாலட் தொகையிலிருந்து கட்டணத்தைச் செலுத்துங்கள். இப்போது டிக்கெட் புக்கிங்க் ஆகிவிடும்.