சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான (Commercial) சிலிண்டர் விலை இன்று (ஏப். 1) அதிரடியாக உயர்ந்து புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது. ஏற்கனவே எரிபொருள் தட்டுப்பாட்டால் சிரமப்பட்டு வரும் நிலையில், ஒரே நாளில் சிலிண்டர் விலை ₹2,246.50 ஆக உயர்ந்திருப்பது ஹோட்டல் மற்றும் உணவக உரிமையாளர்களைப் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு காரணமாக உணவகங்களில் சாப்பாட்டு விலையும் உயரக்கூடும் என்பதால், சாமானிய மக்களும் கலக்கத்தில் உள்ளனர்.

​அதே சமயம், வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது இல்லத்தரசிகளுக்குச் சற்று நிம்மதி அளிக்கிறது. சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் ₹928.50 என்ற நிலையிலேயே தொடர்கிறது. வணிக சிலிண்டர் விலை உயர்வு மறைமுகமாக மக்களின் பாக்கெட்டை பதம் பார்க்கும் என்றாலும், வீட்டு உபயோக சிலிண்டர் விலை ஏறாதது ஒரு சிறிய ஆறுதலாகவே பார்க்கப்படுகிறது.