கர்நாடகாவை சேர்ந்தவர் பூஜா ராமசந்திரன். இவர் இந்திய பட நடிகை, VJ மற்றும் மாடல் அழகி ஆவார். மேலும் இவர் அழகுப் போட்டிகளில் கலந்துகொண்டு மிஸ் கோயம்புத்தூர் 2004 பட்டத்தை வென்றார். அதன்பின் மிஸ் கேரளா 2005 போட்டியில் கலந்துகொண்டு, 2ம் இடத்தைப் பிடித்தார். அத்துடன் இவர் SS மியூசிக்கில் VJ வாக பணியாற்றினார்.

அதேபோன்று பிக்பாஸ் தெலுங்கு 2ல் வைல்ட் கார்டு போட்டியாளராக நுழைந்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இதற்கிடையில் பூஜா கடந்த 2019ம் வருடத்தில் நடிகர் ஜான் கொக்கேன் என்பவரை 2ம் திருமணம் செய்து கொண்டார். இதில் ஜான் கோக்கேனுக்கும் இது 2வது திருமணம் தான். அண்மையில் தான் கர்ப்பமாக இருப்பதாக பூஜா அறிவித்தார். இந்நிலையில் பூஜா வயிற்றில் குழந்தை உடன் தலைக்கீழாக நின்றப்படி யோகா செய்து உள்ளார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.