ரஜினிகாந்த் மக்கள் இயக்கத்தின் நிர்வாகி சுதாகர் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்..

ரஜினிகாந்த் மக்கள் இயக்கத்தின் நிர்வாகி சுதாகர் (71) உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார். ரஜினியின் ரசிகர் மன்றம், மக்கள் இயக்கத்தை கவனித்து வந்த சுதாகர் திடீர் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்த உள்ளார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், என்னுடைய அருமை நண்பர் வி.எம்.சுதாகர் நம்மை விட்டுப் பிரிந்தது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.” என்று தெரிவித்துள்ளார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.