வருகிற 2026 தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சியினர் களப்பணிகளில் ஈடுபட ஆரம்பித்து விட்டனர். விஜயின் தமிழக வெற்றி கழகமும் வருகிற 2026 தேர்தலில் போட்டியிட உள்ளது.
அதிமுக எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அநாகரிகமாக பேசுவதையே எதிர்க்கட்சித் தலைவர் கொள்கையாக கொண்டிருக்கிறார். அதிமுக ஆட்சியில் தொடங்கிய அம்மா உணவகத்தை முன்பை விட சிறப்பாக நடத்துகிறோம். மேலும் திமுக ஆட்சியில் தான் மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். அதனை பார்த்து சிலர் வயிறு எரிவதாகவும், ஏதேதோ பேசுவதாகவும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.