நாடு முழுவதும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் பலரும் வெளியூர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். அதனால் பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க லோக்மான்ய திலக் டெர்மினஸ், மும்பை மற்றும் திவிம் இடையே 32 கூடுதல் கோடைகால சிறப்பு ரயில் சேவைகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி லோக்மான்ய திலக் டெர்மினஸ் மும்பையில் இருந்து ஏப்ரல் 18 முதல் ஜூன் 6 ஆம் தேதி வரை இரவு 10.15 மணிக்கு புறப்படும்.

அதே போல மறுநாள் காலை 9.50 மணிக்கு இந்த ரயில் திவிம் சென்றடையும்.  சிறப்பு ரயில் திவிமில் 4 மணிக்கு புறப்படும். இந்த ரயில் ஏப்ரல் 19 முதல் ஜூன் 7 ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமை மாலை மற்றும் அடுத்த நாள் அதிகாலை 03.45 மணிக்கு மும்பை லோகமான்ய திலக் டெர்மினஸ் சென்றடையும். மேலும் கோடைகால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஏப்ரல் 13ஆம் தேதி தொடங்கிய நிலையில் www.irctc.co.in என்ற இணையதளத்தில் செய்யலாம்.