இந்தியாவில் அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன. அதனால் ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறை குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி முன்னதாக வெளியிட்டு வருகிறது. ஏப்ரல் மாதம் பல பொது விடுமுறை நாட்கள் வருவதால் வங்கிகளுக்கு அதிக விடுமுறைகள் வருகின்றன. பொதுவாகவே இரண்டாவது சனி, நான்காவது சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் வங்கிகள் மூடப்பட்டு இருக்கும். அதன்படி ஏப்ரல் மாதம் இன்னும் எத்தனை நாட்கள் வங்கிகள் விடுமுறை என இதில் பார்க்கலாம்.

  • 14 ஏப்ரல் 2024: ஞாயிறு
  • 15 ஏப்ரல் 2024: இமாச்சல தினம் (கவுகாத்தி மற்றும் சிம்லா)
  • 17 ஏப்ரல் 2024: ராம நவமி (அகமதாபாத், பேலாபூர், போபால், புவனேஸ்வர், சண்டிகர், டேராடூன், காங்டாக், ஹைதராபாத், ஜெய்ப்பூர், கான்பூர், லக்னோ, பாட்னா, ராஞ்சி, சிம்லா, மும்பை மற்றும் நாக்பூர்)
  • 20 ஏப்ரல் 2024: கரியா பூஜை (அகர்தலா)
  • 21 ஏப்ரல் 2024: ஞாயிறு,
  • 27 ஏப்ரல் 2024: நான்காவது சனிக்கிழமை
  • 28 ஏப்ரல் 2024 – ஞாயிறுக் கிழமை