உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் whatsapp நிறுவனம் பயனர்களுடைய வசதிக்காக பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் தற்போது புதியதாக அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இந்த புதிய வசதி பயனர்களுக்கு ஷார்ட் கட்டை மறைத்து அவர்களின் வழக்கமான பயன்பாட்டில் AI தொடர்புகளை ஒருங்கிணைக்க வேண்டுமா? இல்லையா? என்பதை தேர்வு செய்ய அனுமதி கொடுக்கிறது.

மேலும் இந்த வசதி தேவையற்ற கருத்துக்களை பார்க்காமல் தவிர்க்கும் வாய்ப்பை வழங்குகிறது. இந்த வசதி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ஆண்ட்ராய்டுக்கான சமீபத்திய வாட்ஸ் அப் பீட்டாவை நிறுவும் பீட்டா சோதனையாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் இந்த புது அப்டேட் அனைத்து பயனர்களுக்குமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.