வாட்ஸ் அப் செயலி பயனர்களின் பாதுகாப்பு, அனுபவத்தை மேம்படுத்தும் நடவடிக்கையாக பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது குறிப்பிட்ட நபருடனான உரையாடலை, ரகசிய குறியீடு வாயிலாக மறைக்கும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்மூலம் குறிப்பிட்ட உரையாடல்களை பாஸ்வேர்ட் மூலம் பாதுகாத்துக் கொள்ளலாம்.

Search Bar-இல் பாஸ்வேர்ட்டை பதிவிட்டால் மட்டுமே, நாம் மறைத்துவைத்துள்ள உரையாடல்கள் வாட்ஸ்அப்பில் காட்டும். எண், எழுத்து,எமோஜிக்கள் என எது வேண்டுமானாலும் ரகசிய குறியீடாக வைத்து கொள்ளலாமென மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.