ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அடுத்தடுத்து பல புதிய சேவைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக ரிலையன்ஸ், ஜியோ சந்தையில் அறிமுகமானதற்குப் பிறகு மற்ற நிறுவனங்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்க அதை தக்க வைத்துக்கொள்ள பல்வேறு சிறப்பு திட்டங்களை ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில் புதிய ரீசார்ஜ் திட்டம் ஒன்று ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

அதாவது இலவச நெட்பிளிக்ஸ் உடன் ஏர்டெல் அதன் வாடிக்கையாளர்களுக்கு 1500 ரூபாய்க்கும் குறைவான விலையில் இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இந்த புதிய ரீசார்ஜ் திட்டத்தின் மூலமாக வாடிக்கையாளர்கள் மற்றும் டேட்டாவின் பலன்களை பெற முடியும். ஏர்டெல் இந்த புதிய ப்ரீபெய்டு திட்டம் 1499க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் தினமும் மூன்று ஜிபி டேட்டா பலனை பெறலாம். ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மையும் உள்ளது. ஏர்டெல்லின் 1499 பிரீபெய்டு திட்டம் 84 நாட்கள் வேலிடியுடன் இருக்கிறது.