உலக அளவில் மக்கள் அனைவரும் வாட்ஸ் அப் செயலியை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள் . இந்நிலையில் வாட்ஸ் அப்பில் பல முக்கிய அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் புதிதாக வந்த அப்டேட் மக்களை கவரும் விதமாக இருக்கிறது. அதாவது whatsapp நிறுவனம் வீடியோ கால் செய்யும்பொழுது எமோஜிகளை அனுப்பும் வசதியை சமீபத்தில் தான் அறிமுகம் செய்திருந்தது.

அதேபோல வாட்ஸப் வீடியோ காலின் பொழுது குறிப்பிட்ட செய்கைகள் செய்தால் அது குறிப்பிட்ட இமோஜிகளை காட்டும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது வீடியோ காலின் போது விரல்களை அமைதியான செய்கை காட்டினால் திரையில் பலூன்கள் வெடித்து சிதறும். அதேபோல இதய செய்கை காட்டினால் இதய இமோஜி  திரையில் வரும். இந்த வசதி விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் என whatsapp நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.