இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மொபைல், லேப்டாப் பயன்படுத்தாமல் இருப்பது என்பது இன்றியமையாதது. காலை விழித்தது முதல் இரவு தூங்கும்போது கூட செல்போன் பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கிறோம். இப்படி  தொடர்ந்து இவற்றை பயன்படுத்தும் கண்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இப்பிரச்னையில் இருந்து விடுபட, ‘பெங்களூர் டெக்னாலஜி அசோசியேஷனில்’ தொழில்நுட்பம் ஒன்று வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆட்டோ ஏஜ் நிறுவனம் தயாரித்துள்ள ‘ஐடி’ செயலியை உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து, மொபைலைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, திரையில் ஒரு பிளிங்க் ரிமைண்டர் நோட்டிபிகேஷன் தோன்றி, உங்கள் கண்களை உஷார்படுத்தும்.